சிறுவயது முதலே, அறிந்தோ, அறியாமலோ நம்மில் பலருக்குத் தமிழ்த் திரையுலகம் அறிமுகம் ஆகிவிடுகிறது. அன்றிலிருந்து, திரையரங்கத்திலோ அன்றி தொலைக்காட்சி/ இணையதளம் வாயிலாகவோ நாம் தமிழ்த் திரைப்படங்களுடன் பயணித்து வருகிறோம். அப்பயணத்தின்போது என்றாவது தமிழ்த் திரைப்படங்களில் ஆங்கிலம் தேவையில்லாமல் மிகையான ஆதிக்கம் செலுத்துவதை உணர்ந்திருக்கிறீர்களா? உரையாடல்களில் காட்சியின் தேவை கருதி ஆங்கிலமோ இன்னபிற மொழியோ இடம்பெறுவது வேறு. தமிழறிந்தோருக்காக, தமிழ்த் திரைச்சந்தையைக் குறிவைத்து வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படம்கூட, துவக்கத்திலிருந்தே ஆங்கிலத்தின் செல்வாக்கைப் பறைசாற்றுவது உங்களை உறுத்தியதுண்டா? நம் தமிழ்த்”திரைப்படங்களில்“திரைப்படங்களில் தமிழ் காப்போம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.
Tag Archives: ஆங்கிலம்
தமிழ் வரிவடிவம் பேணுவோம்
உலகெங்கும் பரவியுள்ள தமிழுணர்வு மிக்க நல்லோர்களே… இப்பதிவைப் படிக்கும் நீங்கள், நம் மொழியின் வரிவடிவம் மற்றும் அதன் பயன்பாட்டில் அண்மைக்காலமாக ஏற்பட்டுவரும் எதிர்மறை பாதிப்பு குறித்து அக்கறை கொண்டவர் என்று நம்புகிறேன். அதே சமூக அக்கறையை, நம்மால் இயன்றளவு, நம்மைச் சுற்றியுள்ள இன்னபிற தமிழருக்குள்ளும் விதைத்திடல் வேண்டும். செல்லிடப்பேசியில் குறுந்தகவல்; ‘வாட்ஸ் அப்’, ‘டெலிகிராம்’, போன்ற செயலிகள் வாயிலாக கருத்துக்கள் பகிர்தல்; மற்றும் ‘முகநூல்’, ‘இன்ஸ்டாகிராம்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாக எண்ணங்களைப் பதிவிடுதல் எனப் பல்வேறு”தமிழ்“தமிழ் வரிவடிவம் பேணுவோம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.
