திரைப்படங்களில் தமிழ் காப்போம்

சிறுவயது முதலே, அறிந்தோ, அறியாமலோ நம்மில் பலருக்குத் தமிழ்த் திரையுலகம் அறிமுகம் ஆகிவிடுகிறது. அன்றிலிருந்து, திரையரங்கத்திலோ அன்றி தொலைக்காட்சி/ இணையதளம் வாயிலாகவோ நாம் தமிழ்த் திரைப்படங்களுடன் பயணித்து வருகிறோம். அப்பயணத்தின்போது என்றாவது தமிழ்த் திரைப்படங்களில் ஆங்கிலம் தேவையில்லாமல் மிகையான ஆதிக்கம் செலுத்துவதை உணர்ந்திருக்கிறீர்களா? உரையாடல்களில் காட்சியின் தேவை கருதி ஆங்கிலமோ இன்னபிற மொழியோ இடம்பெறுவது வேறு. தமிழறிந்தோருக்காக, தமிழ்த் திரைச்சந்தையைக் குறிவைத்து வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படம்கூட, துவக்கத்திலிருந்தே ஆங்கிலத்தின் செல்வாக்கைப் பறைசாற்றுவது உங்களை உறுத்தியதுண்டா? நம் தமிழ்த்”திரைப்படங்களில்“திரைப்படங்களில் தமிழ் காப்போம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

அன்றாடப் பேச்சில் தமிழ் காப்போம்

”மொழிகள் யாவும் மதிப்போம் பற்பல மொழிகள் கற்போம் தாய்மொழிப் பற்று போற்றுவோம் நம் தலையாயப் பொறுப்புணர்ந்து அடுத்தத் தலைமுறையும் மகிழ்வுற்று செம்மொழி பேணச் செய்குவோம்” இயல்பான தமிழ்ச் சொற்கள் பலவற்றை ஒதுக்கி, நாம் சற்றும் தயக்கமின்றி நூற்றுக்கணக்கான ஆங்கிலச் சொற்களை அன்றாடம் பயன்படுத்தி வருகிறோம் என்று என்றைக்காவது நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா? அவ்வெண்ணம் ஆழமான வருத்தத்தையும், மொழியின் இயல்பான தொடர்ச்சியில் ஏற்பட்டுவரும் இடையூறு குறித்த கவலையையும் எனக்குள் உண்டாக்குகிறது. ‘சார்’, ‘மேடம்’, ‘ரைட்’, ‘லெப்ட்’, ‘டர்ன் எடு’,”அன்றாடப்“அன்றாடப் பேச்சில் தமிழ் காப்போம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.